வீதியில் இறங்கினால் தான் மாற்றம் வரும்: அநுர - sonakar.com

Post Top Ad

Tuesday 4 January 2022

வீதியில் இறங்கினால் தான் மாற்றம் வரும்: அநுர

 


சுமைகளைத் தாங்க முடியாமல் இன்னும் காத்திருக்க முடியாது, மாற்றம் அவசியம் என மக்கள் எண்ணினால் வீதியில் இறங்கிப் போராடினால் தான் அது சாத்தியமாகும் என தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


அவ்வாறு மக்கள் தயாரானால் தாமும் தயார் என தெரிவித்துள்ள அவர், கன்டைனர் கணக்கில் பணத்தை அச்சிட்டாலும் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள டொலர் இல்லையென்பதால் இன்று பல தொழிற்துறைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


இதேவேளை, வறுமையான நாடுகளில் ஆட்சியாளர்களும் வறுமையிலேயே இருப்பார்கள் ஆனாலும் நமது நாடு வறுமைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும் ஆட்சியாளர்கள் செழிப்புடன் வாழ்வதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment