கடந்த இரண்டு வருடம் 'கணக்கில்' இல்லை: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 January 2022

கடந்த இரண்டு வருடம் 'கணக்கில்' இல்லை: பிரதமர்

 


கொரோனா பெருந்தொற்றோடு கடந்து போயுள்ள தமது ஆட்சிக்காலத்தின் பழைய இரு வருடங்களை மறந்து புதிய எதிர்காலத்தை நோக்கி நகருமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


கடந்த இரு வருடங்களை விமர்சகர்களிடம் விட்டு விட்டு புதிய நம்பிக்கையுடன் இனி வரும் காலத்தை எதிர் நோக்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


இதேவேளை, ஏலவே மின் வெட்டு மற்றும் அதிக வாழ்க்கைச் செலவினால் அவதியுறும் மக்கள் உணவுத் தட்டுப்பாடு குறித்த அச்சத்துடன் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment