வேடர் சமூகத்திடம் சென்ற 'ஒரே நாடு - ஒரே சட்டம்' - sonakar.com

Post Top Ad

Friday 7 January 2022

வேடர் சமூகத்திடம் சென்ற 'ஒரே நாடு - ஒரே சட்டம்'

 


ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிப் பொருளில் ஞானசாரவுக்கு உயர் அங்கீகாரம் வழங்கி ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணி வேடர் சமூகத்தையும் சந்தித்து கருத்துக் கேட்டுள்ளது.


மக்கள் அபிப்பிராயம் பெறுதல் எனும் அடிப்படையில் வெகுவாக முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் மாற்று அணிகள் ஆளுக்காள் வழங்கும் எதிர்க்கருத்துக்களையும் பதிவு செய்து அதனை ஜனாதிபதி ஊடக பிரிவூடாகவே வெளியிட்டு வரும் ஞானசார தனது 'தேடலை' இவ்வாறு விஸ்தரித்துள்ளார்.


தம்பன கிராமத்தில் கருத்தறியும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஞானசார வேடர் சமூகத் தலைவர் வன்னில அத்தோவையும் சந்தித்துள்ளதோடு வன்னில அத்தோ ஞானசாரவிடம் 'ஆசியும்' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment