ஜனாதிபதியால் 'கடன்' பெறுவதில் மேலும் சிக்கல்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Tuesday 11 January 2022

ஜனாதிபதியால் 'கடன்' பெறுவதில் மேலும் சிக்கல்: சம்பிக்க

 


சீனாவிடம் பெற்ற கடனைத் திருப்பித் தருவதற்கான கால எல்லையை மீள் நிர்ணயம் செய்து நீடிப்பதற்கான ஜனாதிபதியின் கோரிக்கையால் இலங்கையின் கடன் பெறும் தகுதி மேலும் குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறர்ர் சம்பிக்க ரணவக்க.


ஏலவே தரம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் உலகில் எங்குமே கடன் பெற முடியாத நிலை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழலை வெளிப்படுத்தியதன் ஊடாக மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.


இதேவேளை, தமது ஆட்சிக்காலத்தில் ஒரு சதமேனும் இன்னும் கடன் பெறவில்லையென ஜனாதிபதி தெரிவித்த கருத்து வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment