தன்னை ஆட்சியதிகாரத்தில் அமரச் செய்வதற்கு 69 லட்சம் பேர் வாக்களித்த போதிலும் 52 லட்சம் பேர் எதிர்த்து வாக்களித்திருந்தமையை யாவரும் நினைவிற் கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
அந்த வகையில், தற்போது அரசு தொடர்பிலான விமர்சனங்களையும் கட்டுக்கதைகளையும் உருவாக்குவது அந்த 52 லட்சத்தில் உள்ளவர்களும் எதிர்க்கட்சியும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ச மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்கும்படியும் தமது ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment