இரு மாதங்களாக 1700 கன்டைனர்கள் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Saturday, 15 January 2022

இரு மாதங்களாக 1700 கன்டைனர்கள் முடக்கம்

 


நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகம் வந்தடைந்த, அத்தியவாசிய பொருட்களைக் கொண்ட 1700 கொள்கலன்கள் முடங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அரச மட்டத்தில் தொடர்ந்தும் 'பேச்சுவார்த்தைகளே' இடம்பெற்று வருகின்ற போதிலும் இதுவரை தீர்க்கமான முடிவொன்றும் மேற்கொள்ளப்படவில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், நாட்டில் போதிய அளவு டொலர் கையிருப்பில் இருப்பதாகவும் இல்லையென்றும் அரச தரப்பிலிருந்து முரண்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment