கடந்த வருடம் 120,000 பேர் நாட்டை விட்டு சென்றதாக தகவல் - sonakar.com

Post Top Ad

Saturday 1 January 2022

கடந்த வருடம் 120,000 பேர் நாட்டை விட்டு சென்றதாக தகவல்

 


கடந்த வருடம் 120,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புத் தேடி நாட்டை விட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்.


இதில் 30,000 பேர் கட்டாருக்கும் 27,000 பேர் சவுதி அரேபியாவுக்கும் 20,000 பேர் அமீரகத்துக்கும் சென்றுள்ள அதேவேளை, 1400 பேர் தென் கொரியாவுக்கும் 1100 பேர் சிங்கப்பூருக்கும் 1600 பேர் சைப்ரசுக்கும் 800 பேர் ஜப்பானுக்கும் சென்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நாட்டின் பொருளாதார சூழ்நிலையில் வெறுப்படைந்து மேலும் பல லட்சக்கணக்கான விசா விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கடந்த வருடம் ஒக்டோபரில் தகவல் வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment