இலங்கையின் கடன் பெறும் தகுதியைக் குறைத்தது Fitch - sonakar.com

Post Top Ad

Saturday 18 December 2021

இலங்கையின் கடன் பெறும் தகுதியைக் குறைத்தது Fitch

 


Moodyயை அடுத்து இலங்கையின் கடன் பெறும் தகுதியை வெகுவாகக் குறைத்துள்ளது Fitch நிறுவனம்.


இவ்விரு நிறுவனங்களின் தரப்படுத்தலே மேலைத்தேய நாடுகளினால் முக்கியமாக அவதானிக்கப்படுகின்ற நிலையில், 2022 - 2023ல் ஏலவே இருக்கும் கடன்களை சமாளிக்கவும் 'வெளியிலிருந்து' உதவி தேவைப்படுவதாக குறித்த நிவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


வெளிநாடுகளிடம் 26 பில்லியன் டொலரை இலங்கை கடனாகப் பெற்றுள்ளதாகவும் அதனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிலையான திட்டங்கள் இல்லையெனும் அடிப்படையில் மேலதிக கடன் சுமையை இலங்கையால் தாங்க முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


எனினும், மீண்டும் சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவிடம் இலங்கை கடன் கோரிக்கை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment