திருகோணமலையில் இந்தியா: ஒப்பந்தம் தயார்! - sonakar.com

Post Top Ad

Monday, 27 December 2021

திருகோணமலையில் இந்தியா: ஒப்பந்தம் தயார்!

 


சில தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்டும் பல்வேறு சர்ச்சை மற்றும் வாத விவாதங்களுக்குட்பட்டும் வந்த திருகோணமலையில் இந்திய ஆதிக்கத்துக்கான அனுமதி இன்னும் ஒரு மாதத்துக்குள் ஒப்பந்தமாக கைச்சாத்திடப்படவுள்ளது.


அமைச்சர் கம்மன்பில இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானியரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த திருகோணமலை எண்ணை தாங்கிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இந்நிலையில், கடந்த காலங்களில் இப்பிரதேசத்தைக் கையகப்படுத்த அமெரிக்கா - இந்தியா இடையே கடுமையான போட்டி நிலவி வந்ததுடன் தற்போது இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரத்துள்ள நிலையில் அதனை எதிர்க்கும் இந்தியா - அமெரிக்கா இடையே நட்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment