காதி நீதிமன்றங்களை நீக்க ஞானசாரவிடம் கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Monday, 27 December 2021

காதி நீதிமன்றங்களை நீக்க ஞானசாரவிடம் கோரிக்கை

 


இலங்கையில் நடைமுறையில் உள்ள காதி நீதிமன்றங்களை இல்லாதொழிக்குமாறு 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்நடைமுறையூடாக முஸ்லிம் பெண்களுக்கு 'அநீதி'யிழைக்கப்படுவதாக தெரிவித்து, முன்னாள் உயர் நீதிமன்ற பதிவாளராக இருந்த சுபைர் என்பவர் இக் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு விளக்கமளித்துள்ளது.


நீதித்துறையில் 40 வருடங்கள் கடமையாற்றிய அனுபவத்தில் தானாகவே முன் வந்தே இந்த கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளதாக குறித்த நபர் தன்நிலை விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment