ஞானசாரவை 'பிழை' பொறுக்க வேண்டும்: உடுவே தேரர் - sonakar.com

Post Top Ad

Saturday 11 December 2021

ஞானசாரவை 'பிழை' பொறுக்க வேண்டும்: உடுவே தேரர்

 


ஜனாதிபதியின் விசேட செயலணி தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து ஊடகவியலாளர்கள், ஏனைய பௌத்த துறவிகளுக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து தூசன வார்த்தைகளால் பேசி வரும் ஞானசாரவை மக்கள் பிழை பொறுக்க வேண்டும் என்கிறார் உடுவே தம்மாலோக தேரர்.


ஒரு பிக்குவின் இவ்வாறான செயற்பாட்டை வைத்து பௌத்த மதத்தையே எடை போடக் கூடாது எனவும் பௌத்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பை தணித்து ஞானசாரவை நிதானமாக வழிக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கைக்கெட்டாது போன நிலையில் தற்போது கிடைத்திருக்கும் பதவியையும் பாதுகாப்பையும் கொண்டு ஞானசார தலை கால் தெரியாத வகையில் நடந்து கொள்வதாக சிங்கள மக்கள் பெருமளவில் விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment