அமெரிக்க Merck மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் Molnupiravir மாத்திரைகளை கொரோனா சிகிச்சைக்காக உபயோகிக்க ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா அறிகுறிகளுடன் கண்டறியப்பட்ட தொற்றாளர்களுக்கு தினசரி இரண்டு மாத்திரை வழங்குவதன் ஊடாக வைத்தியசாலை அனுமதி மற்றும் மரணத்தை தவிர்ப்பதற்கான சாத்தியக்கூறு 50 வீதத்துக்கு அதிகமாக உள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுவே, ஐக்கிய இராச்சியத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலாவது கொரோனா மாத்திரை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment