ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆதரவாளர் ஒருவர் பொலிசாரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி நாடாளுமன்றுக்குள் சமகி ஜனபல வேகய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பனமுற பொலிஸ் நிலையத்தில் இறந்த நபர் குறித்தே இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இளை மறுத்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சரத் வீரசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment