தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியமை இயற்கை நீதிக்குப் புறம்பானது எனவும் அதனை மாற்றியமைக்க உத்தரவிடுமாறும் கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார் டயானா கமகே.
சமகி ஜன பல வேகய தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றிருந்த அவர், ஆளுங்கட்சி உறுப்பினராக செயற்பட்டு வந்ததுடன் கட்சி முடிவுகளுக்குப் புறம்பாக செயற்பட்டு வந்ததன் பின்னணியில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
எனினும், தனக்கெதிராக முறையான ஒழுக்காற்று விசாரணை இடம்பெறவில்லையெனவும் 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்ததே தான் நீக்கப்பட்டமைக்கு காரணம் எனவும் டயானா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment