வெறுப்பில் GL; மேலிடம் மௌனம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 3 November 2021

வெறுப்பில் GL; மேலிடம் மௌனம்!

 


அமைச்சின் செயலாளர்களுடன் பணியாற்ற முடியாது என்று முறையிடுவோர் பட்டியலில் ஜி.எல். பீரிசும் இணைந்துள்ளார்.


தனக்கும் அமைச்சின் செயலாளருக்குமிடையில் இருக்கும் தொடர்ச்சியான முறுகல் தொடர்பில் மேலிடத்துக்கு எடுத்துக்கூறியும் அதற்கான தீர்வு இது வரை கிடைக்காத நிலையில் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியின் 'சுமையை' தாங்க முடியாது என ஜி.எல். விளக்கமளித்துள்ளார்.


மறுபுறத்தில் கெஹலியவும் இதே வகையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கின்ற அதேவேளை கெஹலியவுடன் முரண்பட்டு பல அதிகாரிகளும், மேலும் அமைச்சர்களுடன் முரண்பாடுகளின் பின்னணியில் மேலும் சில புத்தி ஜீவிகள் அண்மையில் இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment