புத்தளம்: ஆசிரியர் போராட்டத்தில் பெற்றோரும் இணைவு - sonakar.com

Post Top Ad

Wednesday 3 November 2021

புத்தளம்: ஆசிரியர் போராட்டத்தில் பெற்றோரும் இணைவு

 


புத்தளம் பிரதேசத்தில் பல பகுதிகளில் ஆரம்ப பாடசாலை யில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று 03/11/2021 கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆசிரியர்கள்- அதிபர்கள் தமது சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி மிக நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ் ஆசிரியர்கள் அதிபர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றிலிருந்து 03/11/2021 பெற்றோர்களும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


எமது பிள்ளைகளின் கல்வியை பேரம் பேசாதே, எமது பிள்ளைகயின் தரமான கல்விக்கு ஆசிரியரை கௌரவப்படுத்து. தரமான கல்விக்கு வளங்களை வழங்கு.மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதத்தை கல்விக்கு ஒதுக்கு. ஆசிரியர், மாணவர், பெற்றோர்களை, துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்கு. 24 வருட ஆசிரியர்- அதிபர்களின் சம்பளம் முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இப்போராட்டத்தில் பெற்றோர்கள் ஈடுபட்டனர்.


புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை, புத்தளம் ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை போன்ற பாடசாலைகளின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது,


இவ் ஆர்ப்பாட்டங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.


- கரீம் எ. மிஸ்காத்

No comments:

Post a Comment