குட்டியாராச்சியால் சபையில் அமளி! - sonakar.com

Post Top Ad

Tuesday 23 November 2021

குட்டியாராச்சியால் சபையில் அமளி!

 


பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ள பெரமுன உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, மன்னிப்பு கேட்க மறுத்ததால் சபையில் சற்று நேரம் அமளி நிலவியுள்ளது.


சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை துஷ்பிரயோக வார்த்தைகள் கொண்டு சாடியிருந்த விவகாரத்தின் பின்னணியிலேயே மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர்.


குட்டியாராச்சி மறுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுந்து சென்று ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து அங்கு சிறிது நேரம் அமளி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment