ஆபிரிக்க நாடுகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படும் ஒமக்ரோன் கொரோனா வகை தொடர்பில் உலகின் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தென்னாபிரிக்கா உட்பட பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாடுகளிலிருந்து கடந்த 14 நாட்களில் இலங்கைக்கு யாரும் வரவில்லையென விளக்கமளித்துள்ளார் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
தென்னாபிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா, பொட்சுவானா, சுவாசிலாந்து மற்றும் லெசதோ உட்பட் ஆறு ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment