அரபு பெயர்ப் பலகைகளை நீக்க நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 21 November 2021

அரபு பெயர்ப் பலகைகளை நீக்க நடவடிக்கை

 


இலங்கையில், குறிப்பாக கிழக்கில் அரபு மொழியில் வீதிப் பெயர்ப் பலகைகள் இருப்பதாக நீண்ட காலமாக விசனம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் தவிர்ந்த ஏனைய எந்த மொழியிலும் பெயர்ப் பலகைககளை அனுமதிப்பதில்லையென தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இதனை உத்தியோகபூர்வ சட்டமாக அறிவிக்கவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.


இதேவேளை, இலங்கையில் சீன மொழி ஆக்கிரமிப்பு குறித்தும் சமூக வலைத்தளங்களில் மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment