எலமல்தெனியவில் புதிய சனசமூக நிலையம் - sonakar.com

Post Top Ad

Tuesday 16 November 2021

எலமல்தெனியவில் புதிய சனசமூக நிலையம்

 


மாணவர்கள்  பாடசாலைகளில் கற்றுக் கொள்ளுகின்ற கல்வி அறிவை விட  சன சமூக நிலையங்களில் கணிசமானளவு கல்வி அறிவைப் பெற்றுக் கொள்ளுகின்ற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது எமது நாட்டின் சுவிட்சத்திற்கும் அபிவிருத்திற்கும் சகவாழ்வுக்கும்  முன்மாதரியாக அமையும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்ஜித் பண்டார தெரிவித்தார்.


ஸம் ஸம் பவுண்டேன் நிறுவனத்தின்  ஏற்பாட்டில்  கண்டி கெலிஓய தவுலகல வீதியில் அமைந்துள்ள எலமல்தெனிய பிரதேசத்தில் 150 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள  பசுமையான சன  சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிறுவனத்தின் தலைவர் அஷ;nஷய்க் யூசுப் முப்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்ஜித் பண்டார தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து பேசுகையில், ஸம் ஸம் நிறுவனத்துடன் இணைந்து  சமூக நல்லிணக்க மையம் ஆரம்பித்து வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.  பாடசாலையில் இருந்து 20 விகிதமான கல்வியையும்   சன சமூக நிலையத்தில் இருந்து   நூற்றுக்கு 80 விகிதமான கல்வியையும்  பெற்றுக் கொள்ள முடியும் என நான் கருகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.


ஸம் ஸம் நிறுவனத்தின்  மூலம் நிர்மாணிக்கப்படவுள்ள பசுமையான சமூக நிலையம் உடுநுவரப் பிரதேச மக்களின் கல்வித் தேவையை நிறைவு செய்யக் கூடியதும் காலத்தின் தேவையானதுமாகும்.


பாடசாலைக் கல்வி, தொழில் கல்வி என   கல்வி சார்ந்த சகல கற்கை நெறிகளையும் இந்த நிலையத்தில் ஆரம்பிக்க முடியும்.  இதனை நாங்கள் நாட்டுக்கு முன்மாதாரியான இடமாக எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்.  சமய இன குழுவினர்களுக்கென வரையறை இங்கு செய்யப்பட வில்லை   இந்த நிலையத்தை சிறுவர்கள்,   முதியவர்கள்,  இளைஞர் யுவதிகள்,   சமய போதகர்கள்,   மதிப்புக்குரிய சுவாமிமார்கள்.  சகல அரச அதிகாரிகள்,   அரசியல்வாதிகள்  போன்ற அனைவரும் சரிசமனாக கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான சகல உரித்துமுடையவர்கள். இந்த இடத்தில் சமூக மேன்மைப்பாட்டுக்குரிய புதிய முன்மாதரியான  விடயங்களை  முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.


ஸம் ஸம் பவுண்டேசன் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றன.  கண்டி மாவட்டத்தில் உள்ள சிறுவர்கள்  கல்வியை மட்டுமல்ல   கல்வி  முகாமைத்துவம் தொடர்பில்  அறிந்து கொள்வார்கள்.   சுற்றாடலை,   தலைமைத்துவப் பண்புகளை,   அறிந்து கொள்கொள்வதற்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் என்பன இங்கும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான விண்ணப்பங்கள்  ஜனவரி மாதம் முதல் கோரப்படும்.


எங்கள் பிரதேச மக்களிடையே மிக நெருக்கமான  நட்புறடனும் சக வாழ்வுடன் பயணித்த நீண்ட வரலாறு இருந்தது.  எங்களுக்கிடையே மேலும் புரிந்துணர்களை ஏற்படுத்திக் கொள்ள  தேவையவான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.    இது ஒரு புதிய ஆரம்பம்,  சமயத்திற்கப்பாலான  மனித நேயம்.  அரசியலுக்கப்பாலான மனிதநேயம் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம். டி லமாவன்ச: ஸம் ஸம் பவுண்டேசன் மூலம் பேராதனை வைத்தியசாலைக்கு  கணிசமானளவு உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம். டி லமாவன்ச தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து பேசுகையில், இந்நிறுவனம்  சிறு நீரக நோயாளர்களுக்கு அதிகளவு உதவிகள் வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் உதவிகள் செய்வதற்கு வாக்குறுதியுளித்துள்ளார்கள்.  வயது வந்தவர்கள் அதிகளவிலானர்கள் இருக்கின்றார்கள்.  அவர்களுக்கு உள ஆற்றுப்படுத்தலுக்கு அவசியமான உதவிகள் தேவைப்பாடு இருக்கிறது.  கிராமத்தில் உள்ளவர்களுக்கு நாங்கள் எவ்வாறு உதவி  வழங்குவது.  இந்த சனமூக நிலையத்தின் ஊடாக நிறைய சேவைகள் வழங்க முடியும். போதை வஸ்துப் பாவனை , ஒழுக்கமற்ற விடயங்களை எவ்வாறு கட்டுப்படுத்துதல், இப்படியான சமூக நிலையங்கள் மூலம்தான்  முன்னெடுக்க முடியும். பயிற்சியளித்தல், கற்பித்தல் போன்ற விடயங்களுக்கு பயன்படுத்தலாம்.  இத்தகைய செயற்பாடுகள் ஒவுஸ்ட்ரேலியா. பாக்கிஸ்தான், ரஷ;யா போன்ற இன்னும் எத்தனையோ பல நாடுகளில் பல்வேறு விதமான சமூகப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.


பல்கலைக்கழகத்திற்கென முக்கியமான செயற்பாடுகள் உள்ளன. கல்வியை வழங்க வேண்டும். ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் நாட்டுக்கு சமூகத்திற்கு சேவை வழங்க வேண்டும்.  சமூகவியல் பணிகளுக்கு பிரிதொரு பகுதி இருக்கிறது.  விசேட  வைத்திய நிபுணர்கள்  ஒன்றிணைந்து இப்படியான வேலைகள் செய்கின்றார்கள். எங்களது சமூக சேவை அமைப்பின் ஊடாக சிறு நீரக நோயாளிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றோம். இப்படி சமூகப் பணிகள் செய்யும் நிறுவனங்களுக்கு சமூக விஞ்ஞானத் துறைப் பிரிவு இருக்கிறது. நாங்கள் ஒன்றிணைந்து பல்கலைக்கழகங்களிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி பொதுப் பணிகளை செய்ய முடியும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.


இது சமய இன வேறுபாடுகளுக்கப்பால் மேற்கொள்ளப்படும் பணியாகும்.  இது நீண்ட காலம் முன்னெடுக்கப்படும் பணி. இதன் நாட்டுக்கு நல்ல சுவிட்சைத்தையும் பயன்பாட்டையும் தரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பேராதனை பல்லைக்கழக பாலி மொழியியல் கற்கைத் துறைப் பேராசிரியர் மாவத்தகம ஞானானந்த தேரர் ,ஜம்மௌலவி அம்ஹர் ஹக்கம், கண்டி சிரேஷ;ட பொலிஸ் அத்திட்சகர் ரத்நாயக. பாக்கிஸ்தான் நாட்டுக்கான வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார். அகில இலங்கை வை. எம். எம். பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, அகில இலங்கை   பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக், உடுநுவர பிரதேச சபைத் தலைவர் காமினி தென்னகோன், அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன், அமைச்சர் மஹிந்தானந்த அலுத்தமகவின் இணைப்புச் செயலாளரும் யட்டினுவர பிரதேச சபையின் உறுப்பினர் வசீர் முக்தார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


- இக்பால் அலி

No comments:

Post a Comment