ஏல விற்பனைக்கான காணியொன்றுக்கான வழக்கை முன் கொண்டு செல்வதற்காக 10,000 ரூபா லஞ்சம் பெற்ற நீதிமன்ற பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெல்தெனிய நீதிமன்றில் பணியாற்றும் குறித்த நபருக்கு அரச வங்கியொன்றின் அருகே வைத்து லஞ்சம் வழங்கப்பட்ட வேளையில் கைது செய்ததாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
முன்னாள் கடற்படை அதிகாரியொருவரின் முறைப்பாட்டின் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment