வெளிநாடுகளில் குடியேற மக்கள் கடும் பிரயத்தனம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 November 2021

வெளிநாடுகளில் குடியேற மக்கள் கடும் பிரயத்தனம்

  


இலங்கையின் சூழ்நிலை குறித்து பாரிய விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இளைஞர்கள் மற்றும் அரசின் ஆதரவாளர்கள் கூட வெளிநாடுகளில் குடியேறுவதற்கு கடும் பிரயத்தனங்களை செய்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனாவிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில் Sri Lanka Opinion Tracker Survey (SLOTS) மக்கள் அபிப்பிராயம் அறிவதற்காக மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலேயே இவ்வாறு அறியப்பட்டுள்ளதாக Institute for Health Policy (IHP) தெரிவிக்கிறது.


சந்தர்ப்பம் கிடைத்தால், உடனடியாக வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக தெரிவிப்போரின் எண்ணிக்கை ஐந்து வருடங்களில் தற்போது மிக அதிகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment