நான் குடிகாரனில்லை; மைத்ரி விசனம்! - sonakar.com

Post Top Ad

Thursday 11 November 2021

நான் குடிகாரனில்லை; மைத்ரி விசனம்!

 


தனது ஆட்சிக்காலத்தில் ஆட்சியைக் கவனிக்காது வீட்டிலிருந்து மது பானம் அருந்தியே காலம் கழித்தவர் என மைத்ரிபால சிறிசேன மீது மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் தனது மறுப்பையும் வெறுப்பையும் வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


தன்னையறிந்த அனைவருக்கும் தான் புகைத்தல், மதுப்பழக்கம் எதுவுமில்லாதவன் என்பதை அறிவார்கள் என விளக்கமளித்துள்ள அவர், மஹிந்தானந்தவின் பேச்சு கேலிக்கூத்து என தெரிவித்துள்ளார்.


இதே போன்று தனது வீடு குறித்தும் வதந்திகளே பரப்பப் பட்டுள்ளதாகவும் தான் தற்போது வசிப்பது முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவினால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வீடு எனவும் தான் யாருடைய காணியையும் பிடிக்கவில்லையெனவும் மைத்ரி விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment