கோட்டா நினைப்பது போல் நடக்காது: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Sunday 24 October 2021

கோட்டா நினைப்பது போல் நடக்காது: மைத்ரி

 


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நினைப்பது போல் இரசாயன உரத்தினை உடனடியாக நிறுத்தி அதற்கு மாற்றமாக இயற்கை உரத்தை உபயோகப்படுத்தும் வழக்கத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


தாம் அமைச்சராக இருந்த போதும், ஜனாதிபதியாக இருந்த போதிலும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் ஐந்து முதல் பத்து வருடங்கள் இதற்கான செயற்திட்டம் ஒன்றினூடாகவே சாத்தியம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், அரிசி - பருப்பு விலைகளை பார்ப்பதை விட பாரிய மாற்றங்களை உருவாக்கவே மக்கள் தம்மை ஜனாதிபதியாக்கியிருப்பதாக அண்மையில் கோட்டாபே ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment