மேல் மாகாணத்தில் சுகாதார அமைச்சின் அறிவுரைகளுக்கு செவி மடுக்காது தொடர்ந்தும் வீதிகளில் யாசகம் செய்து வரும் நபர்களைத் தேடிப் பிடித்து தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரிலிருந்து யாசகர்களை அப்புறப்படுத்தும் பல கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் தொடர்ந்தும் வீதிகளில் யாசகர்களின் பிரசன்னம் இருந்து வருகிறது.
இந்நிலையிலேயே ஆகக்குறைந்தது தடுப்பூசியை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment