நாடாளுமன்றுக்குள் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Friday, 22 October 2021

நாடாளுமன்றுக்குள் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 


விவசாயிகளின் உரப் பிரச்சினையை மையமாக வைத்து இன்றைய தினம் எதிர்க்கட்சியினர் சபையில் சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதன் போது விவசாயிகளுக்கு உரம் வழங்கு என கோஷம் எழுப்பப் பட்டதோடு விவசாயிகள் அழிவை எதிர் நோக்குவதாக குறிப்பிடும் பதாதைகளும் ஏந்தப் பட்டிருந்தன.


விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் அரசாங்கம் தகுந்த தீர்வை வழங்காமலிருப்பதாக பரந்த அளவில் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, இரு 'தமிழ்' தெரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏந்தியிருந்த பதாதையொன்றையே இங்கு காண்கிறீர்கள்.

No comments:

Post a Comment