நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சாட்சிகள் இல்லாத நிலையில் வெறுமனே சிறையில் தடுத்து வைத்துக் கொண்டிருப்பது ஏற்புடையதில்லையென தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
நாடாளுமன்ற உரையின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், ரிசாத் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்குத் தொடர வேண்டும் இல்லாவடின் அவரை விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதுடன் குற்றச்சாட்டுகள் இருப்பின் அவை நாடாளுமன்றுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, வீட்டுப் பணிப்பெண் மரண விடயத்திலும் ரிசாத் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பினும், குறித்த சம்பவம் நடந்த வேளையில் ரிசாத் ஏலவே சிறையில் இருந்தமையையும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment