நவம்பரில் அரச பாடசாலைகள் முழுமையாக திறப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 8 October 2021

நவம்பரில் அரச பாடசாலைகள் முழுமையாக திறப்பு!

 நவம்பர் முற்பகுதியில் அரச பாடசாலைகள் அனைத்திலும் அனைத்து வகுப்புகளும் இயங்கும் என தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.


ஒக்டோபர் 21ம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளதாகவும் நவம்பர் முற்பகுதியளவில் நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளும் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், க.பொ.த உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை இவ்வருடம் நடாத்த முடியாது என நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment