லொஹான் கைது செய்யப்பட வேண்டும்: TNA - sonakar.com

Post Top Ad

Wednesday 15 September 2021

லொஹான் கைது செய்யப்பட வேண்டும்: TNA

 


குடிபோதையில் சிறைச்சாலைகளுக்குள் சென்று அடாவடியில் ஈடுபட்டு வரும் இராஜாங்க அமைச்சர் லொஹானை உடனடியாக பதவி விலக்கி, கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.


வெலிகடை சிறைச்சாலைக்குள் குடி போதையில் புகுந்து நண்பர்களுக்கு தூக்கு மேடையைக் காட்டி மகிழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த மறுதினம் அநுராதபுர சிறைச்சாலைக்கு 'அழகு ராணி' போட்டியொன்றில் பிரபலமான பெண்ணொருவரையும் அழைத்துச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாழிட வைத்து மிரட்டிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


இச்சம்பவத்தை தாம் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, லொஹானை உடனடியாக பதவி விலக்க வேண்டும் எனவும் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment