பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பிபிசி செய்தியென போலியாக உருவாக்கப்பட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் அதில் எந்த உண்மையுமில்லையெனவும் தெரிவிக்கிறது பிரதமர் அலுவலகம்.
கடந்த சில வாரங்களாக பிரதமரைத் தொடர்பு படுத்தி அவர் சுகயீனமுற்றிருப்பதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வப் போது தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
பிரதமர் இத்தாலி செல்லவுள்ள நிலையில் தற்போது இவ்வாறு பரவும் தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment