இருவர் விலகல்; இராணுவ தளபதி மீது குற்றச்சாட்டு - sonakar.com

Post Top Ad

Tuesday 7 September 2021

இருவர் விலகல்; இராணுவ தளபதி மீது குற்றச்சாட்டு

 இலங்கையின் கொரோனா தொழிநுட்ப குழுவிலிருந்து இரு முக்கிய பிரமுகர்கள் விலகியுள்ளனர். இதேவேளை, இராணுவ தளபதி தன்னிச்சையாக செயற்பட்டு தடுப்பூசி முகாமைத்துவத்தைக் குழப்புவதாகவும் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது.


மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரமவைத் தொடர்ந்து அசோக குணரத்னவும் விலகிக் கொண்டுள்ள அதேவேளை இராணுவ தளபதியின் தலையீடுகள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நலின் த ஹேரத் விசனம் வெளியிட்டுள்ளார்.


இராணுவ தலையீட்டினால் இடம்பெறும் குழறுபடிகளுக்கு பொறுப்பேற்க முடியாது என முன்னதாக ஆனந்த விஜேவிக்ரம தனது முடிவு குறித்து விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment