நாடு முழுமையான வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆட்சியைக் கலைத்து விட்டு தேர்தலை நடாத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீண்டும் மக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்கு 'வரிசையில்' நிற்கும் சூழ்நிலையை இவ்வரசு உருவாக்கியிருப்பதாகவும் அரசின் வருவாய் வீழ்ச்சியடைந்து, நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான எந்தத் தகுதியும் ஆட்சியாளர்களிடம் இல்லையென அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment