தாம் செய்த பிழையை ஏற்றுக்கொண்டு பதவி விலகும் அரசியல் கலாச்சாரம் இலங்கையில் இதற்கு முன் இருக்கவில்லையென தெரிவிக்கும் விமல் வீரவன்ச, அந்த வகையில் பதவி விலகிய லொஹான் ரத்வத்த அனைவருக்கும் முன்னுதாரணமாகி விட்டதாக தெரிவிக்கிறார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட தவறுக்கு அவர் பொறுப்பேற்று அவ்வாறு செய்திருப்பது சிறந்த செயல் எனவும் விமல் தெரிவிக்கிறார்.
இதேவேளை, மற்றைய அமைச்சிலிருந்து அவர் ஏன் விலகவில்லையென வினவப்பட்ட போது, ஆபரண கொள்ளைக்குச் சென்றால் அதிலிருந்தும் அவர் விலகுவார் என விமல் வீரவன்ச விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment