மக்கள் எதிர்ப்புள்ளவர்களுக்கு இனி இடமில்லை: பிரதமர் - sonakar.com

Post Top Ad

Sunday 26 September 2021

மக்கள் எதிர்ப்புள்ளவர்களுக்கு இனி இடமில்லை: பிரதமர்

 மக்களால் நிராகரிக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு இனி தமது கட்சியூடாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


தமது கட்சி சார்ந்த சில அரசியல்வாதிகள் தொடர்பில் பெருமளவு முறைப்பாடுகள் வந்திருப்பதாகவும் அவை தீர விசாரிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு மக்கள் எதிர்ப்பை சம்பாதிப்பவர்களை இனி தமது கட்சியில் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், பெரும்பாலும் மக்களால் விரும்பப்படாதவர்களே தொடர்ந்தும் தேசியப் பட்டியல் ஊடாக நியமனம் பெற்று வரும் கலாச்சாரம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment