வெலிகம அரபா பாடசாலையில் தடுப்பூசி பெறச் சென்ற பொது மக்கள் மீது பொலிசார் தடியடி நடாத்திய சம்பவம் சுகாதார ஊழியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், மேலதிக தடுப்பூசிகளை முதலாவதாக பெறுபவர்களுக்கும் வழங்கப் போவதாக தகவல் பரவியதையடுத்து அங்கு பெருமளவு மக்கள் கூடியதாகவும், அதில் பலருக்கு தடுப்பூசி கிடைக்காததனால் அங்கு பதற்ற நிலை தோன்றியதாகவும் சுகாதார ஆய்வாளர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், பொலிசார் பொது மக்கள் மீது தடியடி நடாத்தி விரட்டியதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, யாரையும் 'தாக்கவில்லை' மாறாக, சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்கவே அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment