முஸ்லிம் அரசியல்வாதிகளால் 'வெட்கமோ வெட்கம்': சாணக்கியன் - sonakar.com

Post Top Ad

Wednesday 22 September 2021

முஸ்லிம் அரசியல்வாதிகளால் 'வெட்கமோ வெட்கம்': சாணக்கியன்

 


ஜனாதிபதியின் பினாமி ஊடாக பேச்சாளரான கலகொட அத்தே ஞானசார, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி 'அல்லாஹ்' என இறைவனைப் பரிகாசம் செய்து பேசியும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனித்திருப்பதை நினைத்தால் வெட்கமாக இருப்பதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சாணக்கியன் ராசமாணிக்கம்.


முஸ்லிமான நீதியமைச்சரே, நீங்களும் அல்லாஹ்வை வணங்குபவரே என நீதியமைச்சருக்கும் சாணக்கியன் ஞாபகமூட்டியதோடு அவரது பேச்சுக்கு இடையூறு செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேசாமடந்தைகளாக இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்களை நினைத்துத் தாம் வெட்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.


20ம் திருத்தச் சட்டத்துக்கு, துறைமுக நகர் சட்டமூலத்தை நிறைவேற்றவெல்லாம் முஸ்லிம்கள் தேவை, ஆனால் இப்போது முஸ்லிம்கள் தேவையில்லாமல் போவதாகவும் அரபு நாடுகளின் பிரதிநிதிகளிடம் வேறு நாடகம் அரங்கேற்றுவதாகவும் சாணக்கியன் தனதுரையின் போது தெரிவித்திருந்தார்.


அதேபோன்று, ஞானசாரவுக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்பில்லையென்றால் ஞானசாரவின் இனவாத பேச்சுக்கு எதிராக விசாரணை நடாத்தி அதனை நிரூபிக்க வேண்டும் எனவும் சாணக்கியன் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment