நெடுஞ்சாலை பணம் கொள்ளை; சந்தேக நபர் கைது - sonakar.com

Post Top Ad

Saturday 18 September 2021

நெடுஞ்சாலை பணம் கொள்ளை; சந்தேக நபர் கைது

 


தென் பகுதி நெடுஞ்சாலையில் வாகனங்களிடம் அறவிடப்படும் கட்டணப் பணத்திலிருந்து 1.4 மில்லியன் ரூபாவோடு மாயமான காசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


காசாளராக பணியாற்றிய குறித்த நபர், குறித்த தொகை பணத்தோடு மாயமாகியிருந்த நிலையில் தேடல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.


எனினும், கைதான நபரிடமிருந்து 380,000 ரூபாவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment