மணல் வியாபாரத்தில் தொடர்பில்லை: நாமல் - sonakar.com

Post Top Ad

Sunday 26 September 2021

மணல் வியாபாரத்தில் தொடர்பில்லை: நாமல்

 


கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத மணல் வியாபாரத்தில் தமக்கு எவ்வித தொடர்புமில்லையென மறுத்துள்ளார் நாமல் ராஜபக்ச.


அரசின் முக்கிய நபர் ஒருவரது ஒத்துழைப்புடன் அங்கு மணல் கொள்ளை இடம்பெறுவதாக அண்மையில் நாடாளுமன்றில் தகவல் வெளியிடப்பட்டிருந்ததையடுத்து குறித்த விவகாரம் பேசுபொருளானது.


இந்நிலையில், அதன் பின்னணியில் இருப்பது நாமல் ராஜபக்ச தான் என வெளியாகி வரும் தகவல்களை மறுத்துள்ள அவர், அவ்வாறு தமக்குத் தொடர்பிருந்தால் பொலிசில் முறையிடும் படி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment