லொஹானிடமிருந்து மரண அச்சுறுத்தல்: மெடில்லே தேரர்! - sonakar.com

Post Top Ad

Saturday 18 September 2021

லொஹானிடமிருந்து மரண அச்சுறுத்தல்: மெடில்லே தேரர்!

 


தனது 'பொழுது போக்கிற்காக' சிறைக்கைதிகளுக்கு தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள லொஹான் ரத்வத்த, தமக்கும் ஒரு கட்டத்தில் மரண அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கிறார் மெடில்லே பன்னாலோக்க தேரர்.


சிங்ஹலே அமைப்பின் செயலாளரான அவர், லொஹானுக்காக அவரது குடும்பத்தில் இருந்து ஒருவர் தமக்கு இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அதனடிப்படையில் அமைச்சராக இருந்தும் அவரது செயற்பாடு அதனை மேலும் நிரூபிக்கிறது எனவும் தெரிவிக்கிறார்.


இப்பின்னணியில், தற்போதுள்ள அமைச்சையும் சீனாவில் யாருக்காவது விற்பனை செய்ய முன்னராக லொஹானை மற்றைய அமைச்சு பதவியிலிருந்தும் விலக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment