தடுப்பூசியைத் தவிர்த்துத் தப்ப முனைந்த நபர்கள் கைது - sonakar.com

Post Top Ad

Thursday 9 September 2021

தடுப்பூசியைத் தவிர்த்துத் தப்ப முனைந்த நபர்கள் கைது

 


தடுப்பூசி பெற்றோருக்கான அட்டையை நிரப்பிக் கொண்ட போதிலும் தடுப்பூசியைப் பெறாமல் நழுவ முனைந்த இளைஞர் குழுவொன்று கைது செய்யப்பட்ட சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதியில் பாடசாலையொன்றில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த நபர்கள் தமது அட்டைகளில் தடுப்பூசி பெற்றதற்கான விபரத்தை நிரப்பிக் கொண்டு, அங்கிருந்து நழுவ முயன்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு நடந்து கொள்வதன் ஊடாக தடுப்பூசி பெற்றோர் தொடர்பிலான புள்ளிவிபரங்கள் பாதிக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment