விமான நிலையத்திலேயே 3 மணி நேரத்தில் PCR - sonakar.com

Post Top Ad

Thursday 23 September 2021

விமான நிலையத்திலேயே 3 மணி நேரத்தில் PCR

 


இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே மூன்று மணி நேரத்துக்குள் பெறுபேறுகளைத் தரும் வகையிலான பி.சி.ஆர் பரிசோதனை நடாத்துவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.

'

எதிர்வரும் சனிக்கிழமை 25ம் திகதி முதல் இச்சேவை இயங்கும் எனவும் தலா 40 அமெரிக்க டொலர் கட்டணம் அறவிடப்படும் எனவும், இதனூடாக கட்டாயமாக ஒரு நாள் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் தேவை இல்லாமலாக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


கட்டாய ஒரு நாள் தங்கியிருப்பின் போது பி.சி.ஆர் முடிவினை திட்டமிட்டு 'பொசிடிவ்' என மாற்றி பயணிகளை பத்து நாட்கள் தங்க வைக்கும் ஊழல் இடம்பெற்றிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அரசு இந்நடவடிக்கையை அறிவித்துள்ளமையும் விமான நிலைய பரிசோதனை சுகாதார அமைச்சின் நேரடி கண்காணிப்பில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment