ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் 'நீண்ட' கால திட்டம்: IGP - sonakar.com

Post Top Ad

Wednesday 25 August 2021

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் 'நீண்ட' கால திட்டம்: IGP

 


ஈஸ்டர் தாக்குதலானது, ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் கூட்டம் ஒன்றினால் குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட சம்பவம் இல்லையென்கிறார் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன.


அதற்கு முன்பாக நடந்த பொலிசார் கொலை, மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் காத்தான்குடி குண்டு வெடிப்பு, வனாத்தவில்லு ஆயுதக் கைப்பற்றல் போன்ற சம்பவங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனித்தனி சம்பவங்களாகக் கருதியே முன்னர் விசாரித்துள்ளதுடன் ஈஸ்டருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு வரையான தொலைபேசி தகவல்களையே ஆராய்ந்ததாகவும் ஆனால் தற்போது 2014 ம் ஆண்டு முதலான ஒரு லட்சம் தொலைபேசி உரையாடல்கள் உட்பட விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


சம்பவத்தின் பின்னணியில் 723 பேர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை அதில் 311 பேர் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் 46 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், சந்தேக நபர்களுக்குச் சொந்தமான 365 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் 168 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment