இலங்கையில் டெல்டா வகை கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதுடன் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
கொழும்பு வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறை நிலவி வருகின்ற அதேவேளை அடிப்படை உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அல்லல்பட்டு வருகின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
வைத்தியசாலைகளிலும் தங்கியிருப்போர் மயங்கி விழும், இறந்து விழும் காட்சிகளை நேரில் கண்டவர்கள் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்ற அதேவேளை, ஆயிரக்கணக்கான தொற்றாறர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தினசரி தொற்றாறர் மற்றும் மரண பட்டியல் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளமையும் மக்கள் சூழ்நிலை குறித்து அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment