பேக்கரி அடுப்புகளிலும் பிணங்கள் எரிக்க நேரிடும்: தேரர் - sonakar.com

Post Top Ad

Sunday 8 August 2021

பேக்கரி அடுப்புகளிலும் பிணங்கள் எரிக்க நேரிடும்: தேரர்

 


சமூக மட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து பாரிய எண்ணிக்கையில் மக்கள் இறந்து வருகின்றனர். எனினும், மக்களுக்கு உண்மையை மறைத்து அரசாங்கம் 'ஊடக' நாடகங்களை நடாத்தி வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் பெரமுன ஆட்சியமைப்பதற்காக பௌத்த சங்கங்ககளை இணைத்து 'உழைத்த' முருத்தெட்டுவே ஆனந்த ஹிமி.


கொரோனா பிணங்கள் குவிந்துள்ளதால் போகிற போக்கில் பொரளை மயானத்தில் எரியூட்டல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்ல முடியாது போகும் எனவும், அதற்குப் பதிலாக பேக்கரி அடுப்புகளையும் பயன்படுத்த நேரிடும் எனவும் தேரர் விசனம் வெளியிட்டுள்ளார்.


இன்றைய சூழ்நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பதும் அதற்குரிய விடயங்களில் கவனம் செலுத்துதலுமே முக்கியம் எனவும் நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம் எனும் பேரில் மாயைகளைக் காட்டுவதை விடுத்து இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment