டெல்டா பரவலுக்கு ரஷ்யர்களின் வருகையே காரணம்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Sunday 8 August 2021

டெல்டா பரவலுக்கு ரஷ்யர்களின் வருகையே காரணம்: சம்பிக்க

 


இலங்கையில் டெல்டா வகை கொரோனா பரவலுக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையே காரணம் என தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க.


குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பில் பிரத்யேக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற அவர், சீனாவுக்கு ரஷ்யாவிலிருந்து சென்ற விமானம் ஒன்றினூடாகவே 'டெல்டா' பயணித்ததாகவும் அது போன்றே இலங்கையிலும் நடந்திருக்கும் எனவும் இது விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.


ராஜபக்ச குடும் உறுப்பினரான உதயங்க வீரதுங்க, ரஷ்ய சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வருவதில் மிகத் தீவிரமான நிலைப்பாட்டில் இருந்ததுடன் அதில் விடாப்பிடியாக இருந்து ஆயிரக்கணக்கானோரை அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment