ரணிலின் பேச்சுக்கு இராணுவ தளபதி மறுப்பு - sonakar.com

Post Top Ad

Monday 9 August 2021

ரணிலின் பேச்சுக்கு இராணுவ தளபதி மறுப்பு

 இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இராணுவமயப்படுத்தியிருப்பதை நிறுத்தி விசேட நிபுணர்களை உள்வாங்கிய புதிய குழு அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தினை நிராகரித்து மறுப்பு வெளியிட்டுள்ளார் இராணுவ தளபதி.


தற்போதைய செயற்பாடும் சுகாதார அமைச்சுடன் இணைந்த - சுகாதார நிபுணர்கள் அடங்கிய குழுவின் அறிவுரையோடே இடம்பெறுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் இராணுவமயப்படுத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment