முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் செப்டம்பர் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர்ந்தும் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முற்பகுதியில் ஊடக சந்திப்பொன்றில் வைத்து முஸ்லிம் தனியார் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி அவர் வெளியிட்ட கருத்துக்கள் வேறு வகையில் அர்த்தப்படுத்தப்பட்டதன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment