'கொரோனா' நிலவரம் மூடி மறைக்கப்படுகிறது: முசம்மில்! - sonakar.com

Post Top Ad

Friday 13 August 2021

'கொரோனா' நிலவரம் மூடி மறைக்கப்படுகிறது: முசம்மில்!

 


நாட்டில் நிலவும் கொரோனா நிலவரம் மற்றும் தகவல்களை யாரோ ஒரு குழு வேண்டுமென்றே மூடி மறைத்து, தமக்குத் தேவையான வகையில் தகவல்களை வெளியிடுவதாக விசனம் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் முசம்மில்.


கொரோனா தொற்றாளர் எண்ணிக்கைகள் திரிபு படுத்தப்படுவதோடு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைகளும் குறைத்தும் குழப்பமுமாகவும் வெளியிடப்படுவதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.


இந்நிலையில், ஜனாதிபதியையும் நாட்டு மக்களையும் தவறான தகவல்களை நம்ப வைப்பதற்கு முயற்சி இடம்பெறுவதாகவும் எதிர்க்கட்சிக்கு தேவையான வகையில் உயரதிகாரிகள் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment