நேற்று கொழும்பிலிருந்து 852; களுத்துறை 320 - sonakar.com

Post Top Ad

Monday 9 August 2021

நேற்று கொழும்பிலிருந்து 852; களுத்துறை 320

 


அண்மைய தினங்களாக தினசரி கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2500ஐத் தாண்டியுள்ள நிலையில் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து மாத்திரம் 852 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


களுத்துறையிலிருந்து 320 பேரும் கம்பஹாவிலிருந்து 319 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் டெல்டா அபாயம் அதிகரித்துள்ளமை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இலங்கையில் டெல்டாவின் தாக்கம் எதிர்வரும் வாரங்களில் மோசமாக இருக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment