என்னை அமைச்சராக்காதது பாரிய தவறு: SB - sonakar.com

Post Top Ad

Saturday, 17 July 2021

என்னை அமைச்சராக்காதது பாரிய தவறு: SB

 


தான் அமைச்சராக இருந்த ஒவ்வொரு துறையிலும் தனது பெயரைப் பதிவு செய்யும் வகையில் சாதனைகள் புரிந்த சிரேஷ்ட அரசியல்வாதியென தெரிவிக்கின்ற எஸ்.பி. திசாநாயக்க, நடைமுறை அரசு தனக்கு அமைச்சுப் பொறுப்பொன்றை தராதமை பாரிய தவறு என்கிறார்.


தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் போதே ஒலிம்பிக், பொதுநலவாய நாடுகளின் போட்டிகளில் எல்லாம் இலங்கையர் ஜொலித்து வெற்றி பெற்றதாகவும் தான் விவசாயத்துறை அமைச்சராக இருந்த போது பராக்கிரமபாகு மன்னனுக்கு அடுத்ததாக தானே அதிகளவான ஒப்பங்களிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


எனினும், தன்னுடைய திறமையை நடைமுறை அரசு இன்னும் உபயோகிக்கவில்லையெனவும் அமைச்சுப் பொறுப்பை தந்தால் ஏற்கக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment